கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்
ஆந்திரா மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகளுக்கு நுண்கிருமி நாசிணி தெளிப்பு.
ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வெளி மாநிலத்திலிருந்து பேருந்துகளுக்கு நுண்கிருமி நாசிணி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் நேற்று காலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தனஞ்செழியன் தலைமையில் தலைமையில் மருத்துவ குழுவினர் கோரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். குறிப்பாக கோரோனா வைரஸ் எவ்வாறு பரவுகின்றது,அதன் அறிகுறிகள், கண்டறியும் முறைகள், சிகிச்சை , முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. கை கழுவும் முறைகள் தொடர்பாக விளக்கினர். மேலும் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வரும் சுமார் 70 பேருந்துகளுக்கு சுகாதாரத்துறையினர் நுண்கிருமி நாசிணி தெளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், மவட்ட பூச்சியியல் வல்லுனர் மதியழகன் சுகாதார ஆய்வாளர்கள் முஸ்தபா,வினோபா, யுவராஜ் உட்பட சுகாதாரத்துறை, பேரூராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
படம் : பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் கோரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
படம் : ஆந்திராவிலிருந்து வரும் பேருந்துகளுக்கு நுண் கிருமி நாசிணி தெளிக்கப்பட்டது.
" alt="" aria-hidden="true" />